×

‘மேக் இன் இந்தியா’ திட்டத்திற்கு ரஷ்ய அதிபர் புடின் பாராட்டு

மாஸ்கோ: உக்ரைன் மீதான போரால் ரஷ்யா மீது ஐரோப்பிய நாடுகள் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன. இந்த கட்டுப்பாடுகளால் ரஷ்யாவின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், இந்தியாவின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில் வழியில், ரஷ்யாவில் உள்நாட்டு தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும், தேவையான அனைத்து பொருட்களையும் உள் நாட்டிலேயே தயார் செய்ய வேண்டும் என்று அதிபர் புடின் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மாஸ்கோவில் பேசுகையில், ‘நமது நண்பரான இந்திய பிரதமர் மோடி ‘மேக் இன் இந்தியா’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். இதன் மூலம் இந்தியாவுக்கு சாதகமான முடிவுகள் கிடைத்துள்ளன. ‘மேக் இன் இந்தியா’ திட்டம் இந்தியப் பொருளாதாரத்தில் தெளிவான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளினால் ரஷ்யாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மேற்கத்திய நிறுவனங்கள் ரஷ்யாவை விட்டு வெளியேறியதால், ரஷ்ய தொழில்முனைவோருக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன’ என்றார்.

The post ‘மேக் இன் இந்தியா’ திட்டத்திற்கு ரஷ்ய அதிபர் புடின் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : President ,Putin ,Moscow ,Russia ,Ukraine ,Dinakaran ,
× RELATED 5ம் முறை அதிபரான பின் ரஷ்ய அதிபர் புடின் 2 நாள் சீனா பயணம்